2024ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீரர் விருதினை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய் வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒமர்சாய் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.
ஒமர்சாய், ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்களில் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், கடந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பெருமையும் அவருக்கே சேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 5 ஒருநாள் தொடர்களில் 4 தொடர்களை வென்றுள்ளது. அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்று அசத்தியது. இந்த நான்கு தொடரிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.