இஸ்ரேல் – காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் குழுவினர் தங்களின் வசமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளனர். இதற்கு பதிலாக, இஸ்ரேல் 290 பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்துள்ளது.
குறிப்பாக, இன்று (25) 4 இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்குப் பதிலாக, 200 பலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இஸ்ரேலிய பெண் அர்பெல் யாஹுட், இன்றைய ஒப்பந்தத்தின் படி விடுதலை செய்யப்பட வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், ஹமாஸ் குழுவினர் இதுவரை அவரை விடுவிக்கவில்லை.
இந்த நிலைமையில், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை, பலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ், அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், அவர் வரும் சனிக்கிழமை (01) விடுதலை செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.
இது, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான புதிய பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.