தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாய் ஒருவரை எரித்து கொலை செய்ய உதவி செய்த மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் நேற்று (13) கைதுசெய்துள்ளனர்.
ஆணமடுவ பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயதுடைய மருமகள் ஆகியோரை பொலிஸார் இதற்கு முன்னரே கைதுசெய்துள்ளனர்.