கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

Date:

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (14) ஆரம்பமாகி, நாளை (15) காலை திருநாள் திருப்பலியுடன் முடிவடையவுள்ளது.

இது தொடர்பாக யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. வழமைபோல இந்த ஆண்டும் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 8,000 பக்தர்களும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர். நெடுந்தீவு பிரதேச சபை, யாழ் மாவட்ட செயலகம் மற்றும் கடற்படை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...