77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் செவ்வாய்க்கிழமை (04) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டின் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் செவ்வாய்க்கிழமை (04) முழுவதும் இயங்காது இருப்பதுடன், பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.