டுபாயில் நடைபெற்றுவரும் இன்டர்நெஷனல் டி20 லீக் போட்டியில் மும்பை எமிரேட்ஸ் அணியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிரண் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்சர்களை நிறைவு செய்தார்.
இதன்மூலம் டி 20 கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 2-வது வீரர் எனும் சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட் அதிக சிக்ஸரில் முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது.