ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுமியின் பாட்டியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பன்றிகளை வேட்டையாட வந்த குழுவின் அலறல் சத்தத்தைக் கேட்டு உயிரிழந்த சிறுமியும் பாட்டியும் வீட்டை விட்டு வெளியே வந்த நேரத்திலேயே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.