மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (04) காலை 77ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், கல்வி பிரிவு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

சுதந்திர தின நிகழ்வின் முக்கிய பகுதியாக, தேசியக் கொடியேற்றம், தேசிய கீதம் இசைத்தல், நினைவஞ்சலி செலுத்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு ஆகியவை இடம்பெற்றன. இதேவேளை, நாட்டின் ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பளிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே நிகழ்வின் முக்கிய செய்தியாக குறிப்பிடப்பட்டது.
