ராகம பகுதியில் வீடொன்றில் 76 வயதான மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட பெண் தனது கணவருடன் வசித்து வந்ததாகவும், சம்பவத்தன்று கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் வீடு திரும்பிய போது, மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலையின் காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய ராகம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.