இந்தியாவில் இருந்து 4,500 மெட்ரிக் டன் உப்பு ஜனவரி 27ஆம் திகதி இலங்கைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து STC தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்ததாவது, இது இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் முதல் தொகுப்பு ஆகும், மேலும் 12,500 மெட்ரிக் டன் உப்பு ஜனவரி 31ஆம் திகதிக்குள் வரப்படும் என்று கூறியுள்ளார். நாட்டின் உப்பு தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு இரண்டு இறக்குமதி செய்பவர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளனர்.
சமீபத்திய பருவமழைக் காலத்தில் உள்ளூர் உப்பளங்களின் சிரமங்களை முன்னிட்டுஇ அரசு உப்பு இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.