கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் ரூபா 11,000 அளவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், குற்றவாளிக்கு ரூபா 31,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி, வெளிநாடொன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 CCTV கேமரா கருவிகளை வரி செலுத்தாமல் விடுவிக்க உதவியமைக்காக ஒரு வணிகரிடம் இருந்து ரூபா 11,000 லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழு (Bribery Commission) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்கிய நீதிபதி மஹேன் வீரமன், குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு மேற்கண்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.