அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (29) இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை (30) மாலை 6 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நீர் வெட்டினால் பாதிக்கப்படும் பகுதிகள்: அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் அமைப்பு: கலத்தெவ, நெலும்கன்னிய, தரியங்குளம், கல்குளம், கவரெக்குளம், வண்ணம்மடுவ, குஞ்சிக்குளம், குருந்தங்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, தன்னயன்குளம், யாழ்ப்பாண சந்தி, பண்டாரபுளியங்குளம், தெப்பன்குளம், ஜெயந்திகிராமம், சாலியபுர, மங்கடவல, லிங்கலபறை, கட்டமான்குளம்.
அநுராதபுரம் புதிய நகர நீர் வழங்கல் அமைப்பு: அநுராதபுரம் படி 01.
மிஹிந்தலை நீர் வழங்கல் அமைப்பு: கந்துவடபற, ருவங்கம, வெல்லமோரண, தரியங்குளம், பலுகஸ்வெவ, சத்தம்பிகுளம், அம்பதலகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரிந்தேகம, கன்னட்டிய மற்றும் குருந்தங்குளம்.
இந்த 21 மணி நேர நீர் வெட்டு காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளில் பொதுமக்கள் தேவையான நீர் சேமிப்பை முன்னதாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.