காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பயணிகள் பேருந்து ஒன்று சீருநுவர – கந்தளாய் வீதியில் சீருநுவர கல்லாறு இராணுவ முகாம் வளைவுக்கு அருகில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
ஜனவரி 20 ஆம் தேதி அதிகாலை 12:15 மணியளவில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டது.இதில் பயணித்த 49 பேரில் சாரதி, நடத்துனர் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக சீருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சாரதி மற்றும் ஒன்பது பயணிகளும் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
மற்றொரு பேருந்து விபத்தில் 14 பேர் காயம்
Date: