20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா விடுத்துள்ள பட்டியலில் ரஷ்யா, வட கொரிய, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளடங்கியுள்ளன.
குறித்த நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்று அமெரிக்க அரசாங்கம், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் – ரஷ்ய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கள் இருக்கிறது. பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.
மேலும், வடகொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளமை போன்ற காரணங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.