ரயில் மற்றும் பஸ்ஸில் பயணித்த பிமல் ரத்நாயக்க

ரயில் சேவையில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரயில் மற்றும் பஸ்ஸில் சாதாரண பயணியாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் ரயில் சேவைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பயணிகளுடன் உரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், அவர் அமைச்சர் பயணித்த ரயில் 13 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பயணத்தின் போது, அடிக்கடி ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுதடைதல், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள், நிலையங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் காலாவதியான, பாதுகாப்பற்ற ரயில்களை தொடர்ந்து பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை அமைச்சரிடம் மக்கள்
கேள்வி எழுப்பினர்.

Similar Posts