ரணில் விளக்கமறியல் – நீதிமன்றத்துக்கு அருகில் பதற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அருகே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியிருந்தபோதே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts