தொடங்கொட, வில்பத்த பகுதியில் வீடொன்றின் மீது புதன்கிழமை (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வீட்டின் பல ஜன்னல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உயிரிழப்பு, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணையில் தெரியவருவதாவது: ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனின் பெயரைக் தெரிவித்து, இனந்தெரியாத நபர்களால் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இளைய மகன் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றப்புலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.