
ரஷ்ய பொது நல குடியரசின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இன்று (18) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், ரஷ்ய பொது நல குடியரசின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களான மொஸ்கோ நகர டுமாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதானி சுப்ரிலின் நிகோலாய், மொஸ்கோ நகர டுமாவில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி பணிக்குழாம் பிரதானி டிமோகோவ் செர்ஜி, ஶ்ரீ பாலி வளாக வெகுஜன ஊடகத் துறைப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க, வில்போர்ட் ஜயசிங்க மற்றும் சிரான் இளன்பெரும ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ஜே.சி. அலவத்துவல, திருமதி சமிந்திரனி கிரியெல்ல உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.



