இவ்வருட ரமழான் மாதம் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 30ஆம் திகதி முடிவடைய உள்ளதை கருத்தில் கொண்டு, முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகைகளிலும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக்கூடிய வகையில், வேலை நேரங்களை ஒழுங்குபடுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு ரமழான் காலத்தில் மத வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய நேர அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே விசேட விடுமுறை வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரமழான் பெருநாளை முன்னிட்டு இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்பாக அரச சேவை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகளில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கு விழா முற்பணம் வழங்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.