யாழ் ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் (Jaffna) செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் (Canada) கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரசன்னா நல்லலிங்கம் என அழைக்கப்படும்அஜந்தன் சுப்ரமணியம் என்ற 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

இதன்படி, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொத்மலை இறம்பொடை பஸ் விபத்து: 21பலி

கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கியுள்ளது. அதன்படி,...

புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று...

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் இராஜினாமா

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும்...