யாழ் வடமராட்சி அல்வாய் மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவ் இடத்தை சேர்ந்த கந்தையா கணபதிப்பிள்ளை என்ற 86 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமையில் வசித்து வந்த வேளையில் நேற்று 12ம் திகதி காலையில் இருந்து கூக்குரலிட்டவாறு இருந்துள்ளார்.
பின்பு சத்தம் கேட்காது இருந்த வேளையில் அயலவர்களால் கிராம அலுவலகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் அங்கு சென்று பார்த்த வேளையில் முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு நேற்று 12ம் திகதி இரவு பருத்தித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணை செய்து உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.