பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பொடி லெசிக்கு பிணை வழங்கப்பட்டதாகவும், அடுத்த நீதிமன்ற திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும் குறித்த பிணை நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “பொடி லெசி” மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு பொடி லெசியை இலங்கை அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.