முன்னாள் ஜனாதிபதிகள் எதிர் கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கைகளினை மீளாய்வு செய்த பின்பு அவர்களுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு எண்ணிக்கை 51 ஆகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்பு எண்ணிக்கை 58 ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பும் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.