மாபியாக்களை இல்லாதொழிப்பதற்கு கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்

Date:

அரிசி மாபியா, மின் மாபியா ஆகியவற்றை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் கூறியது.ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாபியாக்களை இல்லாதொழிப்பதற்கு கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் தொடர்பான முதல் நாள் சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

அரசு கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்பதில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மத்தியில் தெளிவின்மை பிரச்சினை உள்ளது. நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பஸ்கள் மற்றும் ஆட்டோக்களின் உதிரிபாகங்கள் அகற்றப்படுகின்றன. இதுவே பாரதூரமான பிரச்சினை. உதிரிப் பாகங்களை அகற்ற வேண்டுமானால் முதலில் கால அவகாசம் வழங்க வேண்டும். அதேபோன்று அவற்றை இறக்குமதி செய்வதையும் தடுக்க வேண்டியது அவசியம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மதுபான சாலை அனுமதிப் பத்திரங்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்தது.

ஒருசில நபர்களின் பெயர்கள் மறைமுகமான வகையில் வெளியிடப்பட்டன . ஆனால் இதுவரை உண்மையான பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. விநியோகிக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படவில்லை. மதுபான சாலை உரிமையாளர்கள் அரசாங்கத்தை ஆக்கிரமித்து விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

அரிசி மாபியாஇ மின் மாபியா ஆகியவற்றை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் கூறியது..ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாபியாக்களை இல்லாதொழிப்பதற்கு கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துங்கள்.

மின்கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறினார்.ஆனால் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைத்துள்ளது. ஆணைக்குழுவுக்கு நன்றி கூறுகின்றோம்.

பெருந்தோட்டப் பகுதியில் இன்றும் லயன் அறைகளில் தான் மக்கள் வாழ்கிறார்கள். எனவே அரசு முதலில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பாரக்கிறோம். அதனை அரசு செய்ய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை...

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான சிங்கள பாடகர் 'ஷான் புதா' உள்ளிட்ட...

கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவிப்பு

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி...