மஹிந்த உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த மனுவில், முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்த முன்னாள் ஜனாதிபதி, பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார், மேலும் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் தனது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மஹிந்த ராஜபக்ச நீதிமன்றத்தை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

கூடுதலாக, தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்ய பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
மனுதாரர் மஹிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் திருப்பித் தருமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...