பொரளை காசல் வீதியில் உள்ள கட்டுமானப் பகுதியில் இருந்து சனிக்கிழமை (ஜனவரி 18) துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள வெற்று நிலமொன்றில் 02 அடி ஆழமான குழியில் இருந்து சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் மகசீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த ஆயுதத்தை பொரளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு மேலதிக விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.