பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்ற நிலை காணப்படுவதாகப் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்
மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தரினால் மாணவர் சங்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையே இப்பதற்ற நிலைக்குக் காரணமெனவும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுமெனவும் உபவேந்தர் அறிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (14) இரவு முகாமைத்துவப்பீட மாணவர்கள் உலக பல்கலைக்கழக மாணவர் மையத்தில் நடத்திய பிரியாவிடை நிகழ்வின்போது முகாமைத்துவப் பீட மாணவிகளுக்கும் பொறியியற்பீட மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கைகலப்பு ஏற்பட்டது.
கைகலப்பில் ஈடுப்பட்ட இரு மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவங்கள் ஒழுக்காற்றுக் குழு மூலம் உபவேந்தருக்கு அறிவிக்கப்பட்டதன் பின் உடனடியாக சகல பீட மாணவ சங்கங்களுக்கும் தடை விதித்துள்ளதோடு ஒன்று கூடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும், கூட்டங்களில் உரையாற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிக்கிடையே மோதல் ஏற்படுமானால் உடனடியாக காலவரையறையின்றி பல்கலைக்கழகம் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைப்பெற்ற உபவேந்தர் காரியாலயத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அனைத்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டத்திலேயே உபவேந்தர் இதனை அறிவித்துள்ள நிலையில் மாணவர்களிடையே பதற்றநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.