சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விழா நிகழ்வில் முன்வைத்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாகஇ ர்நயெn யுசவ வுசழரிந மற்றும் ளுiஉhரயn ஊhநக வுநயஅ ஐ சேர்ந்த 34 பேர் கொண்ட தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. ஜனவரி 20 முதல் 23 வரை “சீன உணவு விழா” மற்றும் “துறைமுக நகர சீன கலாசார இரவு” நிகழ்ச்சிகளை நடத்தவும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன கலாசார அம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Z}enhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உட்பட இலங்கையர்கள் மற்றும் சீனப் பிரஜைகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.
