தங்காலை – வீரகெட்டிய வீதியில் 3ஆவது மைல்கல் பகுதியில் வியாழக்கிழமை (16) இரண்டு பஸ் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஸ்முல்லயிலிருந்து தங்காலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோதே விபத்து ஏற்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.