2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைபெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரதெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் வியாழக்கிழமை (23) வெளியாகிய நிலையில், பெறுபேறுகளை www.doenets.lk ன்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள் 20,000 பேர் என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்களையும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.