இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல பாகிஸ்தானில் பி.எஸ்.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
பி.எஸ்.எல். தொடரின் 10வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின்
தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் பி.எஸ்.எல் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஷேன் வாட்சன் விலகி
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் ஓராண்டு மீதமிருக்கும் நிலையில் அவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஷேன் வாட்சன் விலகி உள்ளதை அணியின் உரிமையாளர் நதீம் ஓமர்
உறுதிப்படுத்தி உள்ளார்.