குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கொலை சம்பவம் நேற்று முன் தினம் 05ம் தினம் இரவு இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல , தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார்.
மதுபானம் அருந்துகையில் தகராறு
சம்பவம் அன்று, கொலை செய்யப்பட்டவர் இளைஞன் ஒருவருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்து உள்ள நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபரான இளைஞன் கொலை செய்யப்பட்டவரை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபரான 30 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.