போதைப்பொருளுடன் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கடையிலுள்ள நீதிமன்றில் கடமையாற்றும் பணியாளர் ஒருவரிடமிருந்தே 10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்க்கப்பட்ட போதைப்பொருள் கஹவத்த பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வெல்லம்பிட்டி பகுதியில் வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் புதன்கிழமை (15) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.