நாட்டின் நிதி கட்டமைப்பினை பலப்படுத்தி செயற்றிறன் கொண்டதாக மாற்ற தேவையான நடவடிக்கைகளினை எடுக்கும் படி நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று 12ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறாக அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் நிதி நிலைமையை பலப்படுத்த சுயதீன நிறுவனம் எனும் வகையில் மத்திய வங்கியால் மேற்கொள்ள கூடிய அனைத்து நடவடிக்கைகளினையும் முன்னெடுக்கும் படி அதற்குரிய ஒத்துழைப்பையும் வசதிகளையும் அரசாங்கம் எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிதி செயற்பாடுகளினை செயற்றிறன் உள்ளதாக மாற்றுவதற்கு நல்ல ஒரு பொறிமுறையினை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியுள்ளார்.