நாடு முழுவதிலுமுள்ள 46 தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு 2025 மார்ச் 31 முதல் கோருகின்றது.
இந்நிலையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களை பெறுவதற்குரிய இறுதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31 ஆகும்.