யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் புதன்கிழமை (15) மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.

குறித்த மர்ம வீடு மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கரையொதுங்கிய வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் காணப்படுவதாகவும், மக்கள் குறித்த வீட்டினை பார்வையிடுவதற்கு வருகை தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
