நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பிலான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன் எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
நேற்று 13ம் திகதி நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இனி வருகின்ற காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்து உள்ளதோடு சில பிரதேசங்களில் நெல் விலை குறைந்து உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கேற்ப அரச வர்த்தக கூட்டுதாபனத்தினால் 5200 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதனுடைய முதல் தொகுதி இந்த மாதம் 19ம் திகதி இலங்கை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.