கடந்த பொதுத் தேர்தலில், அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வேட்பாளர்களின் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு
எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு வழக்குத் தொடர தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்ட) சட்டத்தரணி சிந்தக குலரத்னவிடம் தெரிவிக்கும்போது: ‘இந்த நாட்களில் வேட்பாளர் பட்டியல்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு மேலதிகமாக, செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 134 அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு வழக்குத் தொடரவுள்ளதோடு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கை எண்ணூறுக்கும் அதிகமாகும்’. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.