தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தென்கொரிய ஊழல் தடுப்பு நிறுவனத்தால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த மாத தொடக்கத்தில் ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்வதற்காக புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்து. இந்நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழக்கு செவ்வாய்க்கிழமை (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதுஇ அவரது பிடியாணையை நீட்டிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியதாகவும்இ நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்வதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் கூடியிருந்த மக்களால் உருவாக்கப்பட்ட தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.