களுபோவில பிரதேசத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையொன்றை இலக்கு வைத்து நேற்றையதினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு
சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொஹுவல பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள புத்தகோஷ மகா வித்தியாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர்
இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன்இ இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பேலியகொட – கெஸ்பேவ மாற்று வீதியில் மஹரகம வீதி அடையாள பலகைக்கு
அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதோடு, இரண்டு போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டடு இன்ஜின் எண்களும் அழிக்கப்பட்டிருந்தாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.