மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லயன் வீடுகளில் வெள்ளிக்கிழமை (17) இரவு தீ பரவியதில் 12 வீடுகள் முற்றாக எரிந்து சேதுமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மவுஸாக்கலை இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீ பரவலினால் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும், வீட்டு உரிமையாளர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றாக எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.

குறித்த தீ பரவல் மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயினால் இடம்பெயர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதற்கு தோட்ட நிர்வாக அதிகார சபை
நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
