சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளைஇ நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரு நாள் வதிவிட செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட...

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும்...

பாராளுமன்றில் ஜீவன் சீற்றம்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும்...

அமெரிக்காவில் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை...