ஒரு மூடை சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கமைய, ஒரு மூடை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.