தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்து மத தமிழ் கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்லையிட வரும் கைதிகளின் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான அளவு உணவுப்பொருட்கள் மற்றும் இனிப்புபொருட்களை எடுத்து வர முடியும் என சிறைச்சாலை ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைகைதிகள் பார்வையிடும் விதிமறைகளுக்கு அமைய நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.