மேற்காசிய நாடான ஈராக்கில் ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் வசித்து வருகின்றனர் இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக இருந்தது. இதற்கமைய 1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஈராக்கில் குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஈராக் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஆனாலும், பெண்கள் மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள்
அதிகரிக்கும். அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குழந்தை திருமண சட்டத்திற்கு ஈராக் ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.