கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்றிரவு (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.
அதற்கமைய, பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரை பின்தொடர்ந்து சென்று மாளிகாவத்தை பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காரில் இருந்த சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.