கம்பஹா சிறுமி கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

Date:

கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

அந்தவகையில் டிசம்பர் 5ம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சிறுமி காணாமல் போனமை தொடர்பில் விசாரணையை தொடங்கிய பொலிசார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர்.

போதைக்கு அடிமையான கணவன்

அதன்படி முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

கணவர் கட்டுமான தொழிலும், மனைவி ஏக்கல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2ம் திகதி அன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்த போது, ​​காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய பெண் தன் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.

இதன்போது, மகள் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும், இன்று வரமாட்டார் மறுநாள்தான் வருவார் எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.

எனினும் 5ம் திகதிவரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணின் கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பணம் கேட்டு தாக்குதல்

2ம் திகதி கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தை கொடுத்து விட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறி விட்டு மனைவி பணியிடத்திற்கு சென்றுள்ளார்.

போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்கப் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தை கேட்டு, மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் , சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில் போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் போட்டு மூடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்றையதினம் 6ம் திகதி கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்

இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா...

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...