கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட பெருந்தகை வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் வாட்டர் லூ தொகுதியில் இவ் வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவ் வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த வாகன கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
களவாடப்பட்ட வாகனங்கள் உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுமார் 52 அதி சொகுசு வாகனங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.