இலங்கை அரசாங்கத்தால் கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கட்டாருக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பது அவரது நியமனத்தின் சிறப்பம்சமாகும்.
1998 ஆம் ஆண்டு இலங்கையின் வெளியுறவு சேவையில் இணைந்த சித்தாரா கான், கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் திறமையாக பணியாற்றி வருகிறார். வெளியுறவுத்துறையின் முக்கியமான பிரிவுகளில் பணியாற்றியதுடன், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்திற்கான மேலதிக செயலாளராகவும் சேவை செய்துள்ளார்.
சித்தாரா கான் கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.