தென்கிழக்கு ஆசியாவில் தம்பாலீர்ப்பாளர் திருமண சமத்துவத்தை அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து அமைந்துள்ளது. இன்று (23) முதல் தம்பாலீர்ப்பாளர் திருமணச் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் 180 தம்பாலீர்ப்பாளர் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு, தம்பாலீர்ப்பாளர் திருமண மசோதாவுக்கு தாய்லாந்து பாராளுமன்றத்தில் ஆதரவாக 400 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 10 வாக்குகள் மட்டுமே பதிவாகி, மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததன் மூலம், தம்பாலீர்ப்பாளர் தம்பதிகள் தாய்லாந்தில்:
திருமணம் செய்வதற்கான சட்ட உரிமை, சொத்துக்களை நிர்வகிக்கல் மற்றும் வாரிசாகப் பெறல் குழந்தைகளைத் தத்தெடுக்கல் போன்ற சம உரிமைகளைப் பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.